இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்க சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வந்தடைந்தார்.
விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
விஜயுடன் இன்று 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
ஆனந்த்
ஆதவ் அர்ஜுனா
அருண்ராஜ்
செங்கோட்டையன்
வெங்கடரமணன்
சிடிஆர் நிர்மல்குமார்
ராஜ்மோகன்
பிரபு
கீர்த்தனா
ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்
பட மூலாதாரம்,DIPR
விழாவில் பங்கேற்றுள்ள பிரபலங்கள்
விஜய் பதவியேற்பு விழாவைக் காண மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, விஜயின் பெற்றோர் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் வந்துள்ளனர்.
நடிகை திரிஷா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.


Post a Comment
Post a Comment