இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகை அன்றோ அல்லது வேறு எந்த நாளிலோ விதிமுறைகளை மீறி, நியமிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் மாடு உள்ளிட்ட எந்தவொரு விலங்கையும் அறுப்பதற்கு அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் வேலை செய்வதற்கும் இனப்பெருக்கத்துக்கும் தகுதியற்ற மாட்டைத் தவிர வேறு எந்த மாட்டையும் இறைச்சிக்காக வெட்ட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிமன்றம் தன் உத்தரவில் கூறியுள்ளது என்ன? பக்ரீத் பண்டிகையன்று மாடு உள்ளிட்ட விலங்குகளை பலியிடுவது குறித்து இஸ்லாமிய மதம் கூறுவது என்ன?
நீதிமன்றம் கூறியது என்ன?
பக்ரீத் பண்டிகையன்று இறைச்சிக் கூடங்கள் அல்லாத பொது இடங்களில் மாடுகள் அல்லது கன்றுகளை பலியிடுவதை தடுக்க கோரிய இந்த வழக்கில் புதன்கிழமை (மே 27) அன்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி. லஷ்மிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
அந்த உத்தரவில், "ஒரு முஸ்லிம் தனது மத நம்பிக்கையையும் கருத்தையும் வெளிப்படுத்துவதற்காக, அந்த நாளில் மாட்டைப் பலியிடுவது ஒரு கட்டாயமான வெளிப்படையான செயல் அல்ல" என முகமது ஹனிஃப் குரேஷி எதிர் பிகார் அரசு வழக்கு, மேற்கு வங்க அரசு எதிர் அஷுதோஷ் லஹிரி வழக்கு, குஜராத் அரசு எதிர் மிர்சாபூர் மோதி குரேஷி கசாப் ஜமாத் வழக்கு ஆகியவற்றின் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி கூறியுள்ளது.
விளம்பரம்
சென்னை உயர் நீதிமன்றம் பட மூலாதாரம்,Getty Images
மேலும், "பல முஸ்லிம் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பசுவதை ஒழிக்கப்பட்டது. பசுப் பாதுகாப்பு என்பது மகாத்மா காந்திக்கு மிகவும் பிரியமான ஒரு விஷயமாக இருந்தது. காலனித்துவப் படையின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே, பசுக்கள் மிக அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்டன என்று புகழ்பெற்ற அறிஞர் ஸ்ரீ தரம்பால் சுட்டிக்காட்டினார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பல மாநிலங்கள் சட்டங்களை இயற்றின, அந்தச் சட்டங்களும் நிலைநிறுத்தப்பட்டன" என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எனவே, "10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் வேலை செய்வதற்கும் இனப்பெருக்கத்துக்கும் தகுதியற்ற பசுவைத் தவிர வேறு எந்தப் பசுவையும் இறைச்சிக்காக வெட்ட முடியாது. அல்லது காயம், உடல் குறைபாடுள்ள அல்லது குணப்படுத்த முடியாத ஏதேனும் நோய் காரணமாக அது வேலை செய்வதற்கோ அல்லது இனப்பெருக்கம் செய்வதற்கோ நிரந்தரமாக இயலாத நிலையை அடைந்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் தகுதிவாய்ந்த அதிகாரியால் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். தகுதிவாய்ந்த அதிகாரியால் கையொப்பமிடப்பட்ட, பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் அத்தகைய சான்றிதழ் எதுவும் சமர்ப்பிக்கப்படாவிட்டால், இறைச்சிக்காக வெட்ட அனுமதிக்கப்படாது." எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இறைச்சிக் கூடத்தை தவிர வேறு எங்கும் எந்தவொரு நபரும் எந்த விலங்கையும் அறுக்கக் கூடாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
நீலகிரி சாலையோரம் கிடந்த ஒட்டுண்ணி ஈ இந்திய இயற்கை வரலாற்றில் இடம்பிடித்தது எப்படி?
நீலகிரி சாலையோரம் கிடந்த ஒட்டுண்ணி 'ஈ' இந்திய இயற்கை வரலாற்றில் இடம்பிடித்தது எப்படி?
15 வயதும் & 150 கிலோமீட்டர் வேகமும் - ராயல்ஸின் 'இருவர்' சன்ரைசர்ஸை பவர்பிளேவிலேயே வீழ்த்தியது எப்படி?
15 வயதும், 150 கிலோமீட்டர் வேகமும் - ராயல்ஸின் 'இருவர்' சன்ரைசர்ஸை வெளியேற்றியது எப்படி?
வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் 2026, கெய்ல், சச்சின்
'உனக்கு 15 வயது இல்லை என்பார்கள்..' - வைபவ் சூர்யவன்ஷியை வியந்து கெய்ல் முதல் சச்சின் வரை கூறியது என்ன?
லுகோனோஸ்டாக் மெசென்டிராய்டிஸ் (Leuconostoc mesenteroides) என்ற பாக்டீரியா தயிருக்கு வெண்ணெய் போன்ற வாசனையைத் தருகிறது.
தயிர் - யோகர்ட்: இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? - உடல்நலனுக்கு சிறந்தது எது?
End of அதிகம் படிக்கப்பட்டது
பக்ரீத் பண்டிகையின் முந்தைய நாளிலோ அல்லது வேறு எந்த நாளிலோ பசுவோ கன்றோ அறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த உத்தரவு மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகை பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,பக்ரீத் பண்டிகை அன்று பகிர்ந்து அளிக்கப்படும் இறைச்சி பெரும்பாலும் பிரியாணியாக சமைத்து உண்ணப்படுகிறது.
இஸ்லாமிய மதம் என்ன சொல்கிறது?
முதலில் பக்ரீத் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
இறைத்தூதர் இப்ராஹிம் தன் மகனின் உயிரைத் தியாகம் செய்ய முன்வந்ததை நினைவுக்கூரும் ஈத் அல்-அதா என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்ராஹிம் கிறிஸ்துவ மற்றும் யூத மதங்களில் ஆபிரஹாம் என அறியப்படுகிறார்.
இறைத்தூதர் இப்ராஹிம் ஒரு கனவு கண்டதாகவும், அதை அல்லாஹ்விடமிருந்து வந்த செய்தியாகக் கருதி, கீழ்ப்படிதலுக்காக தன் மகன் இஸ்மாயிலை பலியிடுமாறு சொன்னதாகவும் நம்பப்படுகிறது. இதனை அவர் தன் மகனிடம் கூறியபோது அதை இஸ்மாயில் ஏற்றுக்கொண்டார். இப்ராஹிம் தன் மகனை கொல்லச் சென்றபோது அல்லாஹ் அவரை தடுத்து நிறுத்தி, மகனுக்கு பதிலாக பலியிடுவதற்கு செம்மறியாட்டை வழங்கியதாக நம்பப்படுகிறது.
இந்த பண்டிகையின்போது, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் வெவ்வேறு விதமான கால்நடைகளை பலியிடுவதை சடங்காக கடைபிடித்துவருகின்றனர். இப்படி பலியிடப்படுவது 'குர்பானி' என அழைக்கப்படுகிறது.
பக்ரீத் பண்டிகை பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,தொழுகை முடிந்த பின்னர் விலங்குகள் பலியிடப்படுகின்றன (கோப்புப்படம்)
எதற்காக விலங்குகளை பலியிட வேண்டும்?
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்
பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்
பின்தொடர கிளிக் செய்யவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
இஸ்லாமிய மதப்படி எந்தெந்த விலங்குகளை பலியிட வேண்டும், எப்படி பலியிட வேண்டும் என்பதற்கு பல்வேறு வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
குர்-ஆனில் இதுகுறித்து என்ன கூறப்பட்டுள்ளது என்பதை இஸ்லாமிய அறிஞர் (மௌலவி) இல்யாஸ் ரியாஜி பிபிசி தமிழிடம் விளக்கினார்.
அவரது கூற்றின்படி, "ஆதி மனிதன் தோன்றியது முதல் ஒவ்வொரு சமுதாயத்திலும் இந்த பலியிடும் முறையை நாம் ஏற்படுத்தி வைத்தோம்" - குர்ஆன் அத்தியாயம்: 22, வசனம்: 34-ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
"கால்நடைகளை விடவும் பெரிய செல்வம் மனிதர்களுக்குக் கிடையாது. ஆதிமனிதன் காலம் தொட்டு மனிதனின் அன்றாட வாழ்வியலில் கலந்தது கால்நடைகள். தன் செல்வங்களுள் மிகப்பெரிய செல்வத்தை இறைவனுக்கு அளிப்பது ஒருவனின் தியாகத்தின் உச்சத்தைக் காட்டும்.
இறைவன் வழங்கிய கால்நடைகளை இறைவனின் பெயரைச் சொல்லி அறுக்க வேண்டும். அறுத்து நீங்களும் உண்ணுங்கள், இல்லாதவர்களுக்கும் வறுமையுற்றவர்களுக்கும் வாரி வழங்குங்கள் என்பதே இதன் நோக்கம். கேட்டு வருபவர்களுக்கும் கேட்டு வராமல் தன்மானத்துடன் இருப்பவர்களுக்கும் வழங்க வேண்டும். 'வெட்டப்படும் விலங்குகளின் இறைச்சியோ, ரத்தமோ இறைவனை சென்றடையாது. மாறாக, உங்களின் உள்ளங்களில் இருக்கும் இறை அச்சமும் இறை கட்டுப்பாடும் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை சோதிப்பதற்காக' என குர்ஆனில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்கிறார் இல்யாஸ் ரியாஜி.
பலியிடப்படக்கூடிய விலங்குகள்
பக்ரீத் பண்டிகை அன்று ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய விலங்குகள் பலியிடப்படுகின்றன. "அரபு நாடுகளில் ஒட்டகத்தை பலியிடுவார்கள். இந்தியாவில் பெரும்பாலும் ஆடு, மாடு ஆகியவற்றை பலியிடுவார்கள்." என கூறுகிறார் இல்யாஸ்.
"இந்த நாளன்று வாய்ப்பு, வசதி உள்ள இஸ்லாமியர் அவசியமாக விலங்குகளை அறுத்து பலியிட வேண்டும். அதன்மூலம், ஏழைகளுக்கு வாரி, வழங்க வேண்டும். ஏழைகளின் பசியைப் போக்குவதுதான் இதன் நோக்கம்."
பக்ரீத் பண்டிகை பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,பக்ரீத் பண்டிகை அன்று தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஆடுகள் பலியிடப்படுகின்றன. (சித்தரிப்புப் படம்)
பலியிடப்படக்கூடிய விலங்குகள் எப்படி இருக்க வேண்டும்?
மௌலவி இல்யாஸ் ரியாஜியின் கூற்றுப்படி குர்ஆனில் இதுகுறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன்படி,


Post a Comment
Post a Comment