கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு—
(கனகராஜா சரவணன்)
மட்டு கரடியனாறு பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (28) இரவு 8.00 மணியளவில் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸ் அவசர சேவையான 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு வந்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு கரடியனாறு தும்பாஞ்சோலை பிரதேசத்தில் குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பான துப்பாக்கி ஒன்றை மீட்டனர்.
இது தொடர்பான மேதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment