நூருல் ஹுதா உமர்
நாவிதன்வெளி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மூன்று பாடசாலைகளுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்குத் தேவையான பாட புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரும், நளீர் பௌண்டஷன் தலைவருமான எம்.ஏ. நளீர் அவர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
அதன்படி வீரத்திடல் அல் ஹிதாயா மகா வித்தியாலயம், சாளம்பைக்கேணி அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயம் மற்றும் மத்தியமுகாம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்வி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என எம்.ஏ. நளீர் தெரிவித்தார்.
.jpg)

Post a Comment
Post a Comment