யாழ்ப்பாண மறைமாவட்ட புதிய ஆயராக ஆயர் அன்ரன் ரஞ்சித் வத்திக்கானால் நியமிக்கப்பட்டுள்ளார்.!!
இவர் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும், மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் பணியாற்றியுள்ளார்.
1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் 2000ஆம் ஆண்டு கொழும்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பல இடங்களிலும் சமய, கல்வி மற்றும் நிர்வாகப்பணியாற்றியுள்ளார்.
உரோமில் இறையியல் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும் ஐக்கிய இராச்சியத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமானி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
யாழ் மறைமாவட்டத்தின் இணை பேராலய ஆலயத்தின் மணி ஒலிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பு வெளியானது.


Post a Comment
Post a Comment