சர்வதேச சூழல் தினம் அனுஷ்டிப்பு



 


சர்வதேச சூழல்   தினமான ஜூன் -05 தினை அனுஷ்டிக்கும் முகமாக    கல்முனை  அஸ்-ஸுஹறா  வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யாவினால்  பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.


அந்த வகையில் முதலில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலையில்  சிரமதான நிகழ்வுகள் முதலில்  இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து  இன்று(05)அப்பாடசாலை அதிபர்   தலைமையில்   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வுகள்    இடம்பெற்றதுடன் அவர்   பல்வேறு சூழல் சார் கருத்துக்களை வழங்கினார்.

இதன் போது இயற்கை ஒரு மடல் எனும் தொனிப்பொருளில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் அடங்கிய விடயங்களை   மாணவர்களின் சுற்றுச்சூழல் தொடர்பான ஆற்றுகைகள் ஊடாக  இடம்பெற்றன.நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள்  எதிர் காலத்தில் பிளாஸ்டிக் பாவனையை இழிவாக்குவதில் தம்மால் இயன்ற  பங்களிப்பை வழங்க உறுதி பூண்டுமிருந்தனர்.


இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்  ஆசிரியர்கள்  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.