அரசாங்கத்தினால் வழங்கப்படும் உர மானியம் ஒரு ஹெக்டேயருக்கு 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, முன்னர் வழங்கப்பட்ட மானியத்தை விட 5,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 502,836 விவசாயிகள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக அரசாங்கம் 10,947 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
குறித்த மானியத் தொகை ஒரே தடவையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment