.(சுகிர்தகுமார்)
ர்)
கதிர்காம பாதயாத்திரைக்கு அரசாங்கம் முழு ஆதரவினையும் தந்துள்ளது. எங்களோடு சுப்பிரமணி எனும் ஜீவனும் இணைந்துள்ளது. அவரை காட்டுவழிப்பாதை ஊடாக கதிர்காமம் கொண்டு செல்ல அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்நிலையில் வயது முதிர்ந்தவர்களின் நிலை கருதி காட்டுவழிப்பாதை நாட்களை அரசாங்கம் 10 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம் என பாதயாத்திரை குழுவின் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த 5ஆம் மாதம் 23ஆம் திகதி செல்வச்சந்நிதியில் இருந்து ஆரம்பமான பாதயாத்திரை குழுவின் ஒரு பகுதியினர் இன்று அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு வருகை தந்தனர்.இவர்களோடு சுப்பிரமணி எனும் ஜுவனும் வருகை தந்துள்ளது. வருகை தந்த பாதயாத்திரை குழுவினருக்கும் சுப்பிரமணிக்கும் இதன்போது பொதுமக்கள் மற்றும் ஆலயங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டு உபசரிப்பு வழங்கப்பட்டது.
இக்குழுவில் 100 இற்கும் மேற்பட்ட வயது முதிர்ந்த முருக பத்தர்கள் வருகை தந்ததோடு சிறுவர்கள் யாரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை.
வருகை தந்த குழுவினர் பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
இதன் பின்னராக அக்குழுவின் தலைவர் மற்றும் முருக பக்தர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் தங்களது யாத்திரை இறை அருளோடு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இப்பயணத்திற்கு அரசாங்கம் சார்பிலும் பொது மக்கள் ஆலயங்கள் சார்பிலும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
இப்பயணத்தில் சுப்பிரமணி எனும் ஒரு ஜீவனும் முறிப்பு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து தெய்வாதீனமாக இணைந்து இன்றுவரை எங்களோடு பயணிக்கின்றது.
அவரை காட்டுவழிப்பாதை ஊடாக கதிர்காமம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களது ஆசை. இதற்கு முடிந்தவர்கள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக கூறினர்.


Post a Comment
Post a Comment