டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கியுள்ளது



 


நடப்பாண்டில் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


அதன்படி, நேற்று (13) வரை மொத்தமாக 69,951 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த 12ஆம் திகதி வரை இந்த எண்ணிக்கை 68,672 ஆக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 1,279 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


டெங்கு பாதிப்பு அதிகளவில் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு மொத்தம் 33,127 நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.


மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 14,464 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 14,004 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதற்கிடையில், ஜூலை மாதத்தின் முதல் 13 நாட்களிலேயே 14,572 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


மேலும், இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அப்போது மட்டும் 21,538 பேர் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.