கிழக்கில் பாவனையில் உள்ள பல பேருந்துகள், பயணிப்பதற்கு உகந்ததல்ல. மிகவும் பழமையானவை. பாரமரிக்கப்படுவதுமில்லை. பராமரித்தாலும் பலகாலம் சேவைக்கிட முடியாத நிலையில், உள்ளது.
இன்று காலை 6.45க்கு பொத்துவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அரசு முறை பேருந்து அக்கரைப்பற்று பகுதியில் வைத்து பழுதடைந்ததால் பாதியில் பயணம் தடைப்பட்டு போனது.
குறிப்பிட்ட இந்த பேருந்து, செயலிழந்தால், பள்ளி மாணவர்களும், அலுவலகப் பணியாளர்ககும், பொதுபயணிகளும் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
கடந்த வாரம் மட்டக்களப்பிலிருந்து, வெளிச் சென்ற பேருந்தும் இடை நடுவில் பயணத்தை நிறுத்தியது
கிழக்கு மாகாணம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தெடுக்கும் பிரதேசமாகும் இங்கு முறையான உயர்தரத்திலாலான புதிய சாலை பேருந்துகள் காணப்படுமாயின் பொத்துவில் முதல் திருமலை வரையிலான உள்நாட்டு பயணிகளிடன் சேர்த்து உல்லாச பயணிகளும் பெரிதும் அரச பேருந்து சேவையை அதிகம் நாடி செல்லக்கூடிய வாய்ப்புகள் கிட்டும்.
இதனால் வருமானமும் பன்மடங்காக அதிகரிக்கப்படும் ஆனால் உண்மை நிலை வருந்தத்தக்கது. புராதனம் வாய்ந்த பேருந்துகளே பொதுப் போக்குவரத்து சேவையில், ஈடுபட்டு வருவதை பார்க்க முடிகிறது
ஜனாதிபதி வினைத்திறனான பொதுப் போக்குவரத்துப் பற்றிப் பேசுகின்றார்.ஆனால், அவரது கருத்துக்கள் செயல் வடிவம் பெறுவதில்லை.



Post a Comment
Post a Comment