மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு கொங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் கொங்கோ மட்டுமின்றி உகாண்டா, லைபீரியா போன்ற ஆபிரிக்க நாடுகளிலும் பரவி வருகிறது.
எபோலா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் கொங்கோ போன்ற நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
இந்நிலையில், கொங்கோவில் 2,473 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், எபோலா வைரஸ் பாதிப்பால் 999 பேர் உயிரிழந்துள்ளதாக கொங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் கொங்கோ சுகாதாரத்துறை திணறி வருகிறது.
எபோலா ஒரு அரிதான நோய், ஆனால் மிகவும் எளிதில் பரவக்கூடியது. வாந்தி, இரத்தம் உள்ளிட்ட உடல் திரவங்கள் வழியாக இந்நோய் பரவலாம். இது பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்த்தொற்று என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment