ஓய்வு பெற்றுச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு



 


இலங்கை பொலிஸ் சேவையில் நீண்ட காலம் இணைந்து கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற 4 உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கல்முனை  கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.அத்துடன் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தில் இருந்து சேவையின் பின்னர் ஓய்வு பெற்றுச் சென்ற 4 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

முதலில் ஒய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும்  வரவேற்றகப்பட்டு நிகழ்வு இடம்பெறும் மண்டபத்திற்கு  அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி உரை மற்றும் ஓய்வு பெற்றுச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள்  உரைகள் இடம்பெற்றன.

பின்னர் சிற்றுண்டிகள் மதிய உணவுகள்  வழங்கப்பட்டு ஓய்வு பெற்றுச் சென்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.இக்கௌரவிக்கும் நிகழ்வில் நினைவுப்பரிசில்களுடன் புகைப்படம் பொறிக்கப்பட்ட கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது சேவையின் பின்னர் ஓய்வு பெற்றுச் சென்றவர்களின் உறவினர்கள் நண்பர்கள்  கலந்து கொண்டதுடன் குறித்த நிகழ்வினை ஆரம்பம் முதல் இறுதி வரை  சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம் வாஹிட் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

அத்துடன் நிகழ்வில் கல்முனை உவெஸ்லி உயர்தர மாணவிகளின் நாட்டிய நடனங்கள் இடம்பெற்றதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தன.இது தவிர இந்நிழ்வானது 2 ஆவது தடவையாகவும் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி தலைமையில் நடைபெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


மேற்படி நிகழ்வுகள் யாவும் கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்   பணிப்புரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  நெறிப்படுத்தலில்    அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி ஆலோசனையில்  நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.