கல்முனை சிறுவர் பூங்காவுக்கு புதிய மின் விளக்குகள்



 (எம்.என்.எம்.அப்ராஸ்) 


 அம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர சபையின் பராமரிப்பில் உள்ள கல்முனை கடற்கரை சிறுவர் பூங்காவின் ஒரு பகுதியில் மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்று செயலிழந்து காணப்பட்ட நவீன மின் விளக்குகள் கல்முனை மாநகர சபையினால் இன்று புதன்கிழமை (15) மீளமைக்கப்பட்டு,புதிய மின் விளக்குத் தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன. 

கல்முனை மாநகர பொது மக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் துரித பணிப்புரைக்கமைய இன்று இவற்றை திருத்தம் செய்வதற்கு அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சொந்தமான நவீன ரக மின் உயர்த்தி வாகனம் வரவழைக்கப்பட்டு கல்முனை மாநகர சபை ஊழியர்களினால் புதிய நவீன மின் விளக்குகள் பொறுத்தும் பணி இடம்பெற்றது. 

இதன் போது குறித்த மின் விளக்குகள் பொறுத்தும் பணி இடம் பெறுவதை கல்முனை மாநகர சபை ஆணையாளர் அங்கு நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டார். 

கல்முனை மாநகர ஆணையாளராக என்.எம். நௌபீஸ் கடமையேற்று சில தினங்களில் மிக நீண்ட காலமாக கல்முனை சிறுவர் பூங்காவில் உள்ள ஒரு தொகுதி மின் விளக்குகள் ஒளிராமல் காணப்பட்ட நிலையில் புதிதாக மின் விளக்குகள் பொறுத்தி நிவர்த்தி செய்யப்பட்டதையிட்டு கல்முனை மாநகர பொது மக்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர். 

கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்முனை கடற்கரை சிறுவர் பூங்காவிற்க்கு கள விஜயம் மேற்கொண்டு அங்கு நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து ஆராய்ந்த நிலையில்,பொது மக்கள் நலன் கருதி புதிய நவீன மின் விளக்குகள் பொறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 மேலும் மேற் குறித்த சிறுவர் பூங்காவிக்கு நாளாந்தம் அதிகளவிலான பொது மக்கள்,சிறுவர்கள் பொழுது போக்கை கழிக்க வரும் இடமாக உள்ளமை சுட்டக் காட்டத்தக்கது