வெளிகண்டல் பாலத்தில் விபத்து – இருவர் காயம்




(முஹம்மது ஜிப்ரான்)

 மூதூரைச் சேர்ந்த மீன் ஏற்றிச் சென்ற வாகனம் வெளிகண்டல் பாலத்தில் விபத்து – இருவர் காயம்

மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த மீன் ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று, வெளிகண்டல் பாலத்தில் மோதி இன்று (11) விபத்துக்குள்ளானது.
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தை நோக்கி மீன் ஏற்றிச் சென்ற குறித்த வாகனம், இன்று காலை பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் உள்ள வெளிகண்டல் பாலத்தை ஊடறுத்து பயணித்துக் கொண்டிருந்தபோது,
கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் அவசர மருத்துவ உதவிக்குழுவின் நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) மூலம் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.