(வி.ரி.சகாதேவராஜா)
கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மற்றுமொரு யாத்திரீகர் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென மரணமானார்.
இச்சம்பவம் பாணமையில் இடம் பெற்று இருக்கிறது .
நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்பவரே இவ் விதம் மரணமான யாத்திரீகர் ஆவார்.
இவர் காரைதீவில் திருமணம் முடித்தவர்.
இவரது பிரேதம் தற்சமயம் பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றது .
இவரை லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். புனிதராஜன் பார்வையிட்டார்
இதேவேளை பாதயாத்திரை முதல் யாத்திரிகர் மரணம் கடந்த 8 ஆம் திகதி பொத்துவில் குண்டுமடு பகுதியில் வைத்து இடம்பெற்று இருக்கின்றது.
அவர் வவுனியாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment