வாழ்வாதார உதவிகள்




 பாறுக் ஷிஹான்



"எதிர்நீச்சல் போட முயற்சிக்கின்ற ஊக்கமுள்ள மக்களுக்குத் துணையாக..." எனும் தேசிய சமூக வலுவூட்டல் மாதக் கருத்திட்டத்திற்கமைவாக, சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 43.5 இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் நேற்றைய தினம் (13) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். எம். ஹனீபா தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கரையோரப் பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்களை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான வை. பி. நபாஸ் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டார். மேலும் உதவிப் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலகக் கணக்காளர், பிரஜாசக்தி தவிசாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.