நடந்து முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மதிப்பீட்டுப் பணிகள் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் சுமார் ஒரு மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட அதிகாரிகளுக்கு இயலுமாகும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.இந்திக்கா குமாரி லியனகே தெரிவித்தார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெற்றதுடன், நாடு முழுவதும் இப் பரீட்சைக்கு மொத்தம் 294,089 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment