திருக்கோவில் பிரதேச விவசாயிகளின் அவல நிலை



 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்     

திருக்கோவில் பிரதேச விவசாயிகளின் அவல நிலை  -
நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியத்தினால் திருக்கோவில் பிரதேச விவசாயிகளின் நெல்லினை பெற்றுக்கொள்லாமல் நீண்ட நாட்களாக காலம் தாழ்த்துவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துவரும் நிலையில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சு.சசிகுமாரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கையினை கேட்;டறிந்து கொண்ட தவிசாளர் சம்மந்தப்பட்டவர்கள் உடன் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதுடன் எழுத்து மூலமாகவும் அறிவித்தல் வழங்கியுள்ளார்.
திருக்கோவில் பிரதேச விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையின் (Pஆடீ) களஞ்சியசாலை மூலம் தங்களது நெல்லினை விற்பனை செய்ய முடியாமல் நீண்ட நாட்களாக பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய முக்கிய பிரச்சினைகள்காலம் தாழ்த்தப்படுதல்: அறுவடை செய்யப்பட்ட நெல்லைக் கொள்வனவு செய்ய அதிகாரிகள் நீண்ட நாட்களாகத் தாமதித்து வருகின்றனர்.
இதன் காரணமாக நெல் வீணாகுதல் மற்றும் முறையான சேமிப்பு வசதிகள் இல்லாததால், திறந்தவெளிகளில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையினால் நனையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
நெல்லை விற்க முடியாததால் நிதி நெருக்கடி காரணமாக விவசாயிகள் தங்களது அடுத்தகட்ட பயிர்ச்செய்கைக்கான முதலீடுகளைப் பெற முடியாமல் கடனாளியாக மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் திருக்கோவில் களஞ்சியசாலை உடனடியாக நெல் கொள்வனவை ஆரம்பிக்க வேண்டும்.
விவசாய அமைச்சு மற்றும் மாவட்ட அதிகாரிகள் தலையிட்டு இதற்குரிய விரைவான தீர்வை வழங்க வேண்டும். என வலியுறுத்துவதாகவும் அவர் கேட்டுக்கொண்டார்.