காலி வீதியில் கார் விபத்து - மூவர் படுகாயம்




 கொழும்பில் இருந்து களுத்துறை நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்று வாஸ்கடுவ - காலி வீதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வாஸ்கடுவ - காலி வீதியில் குறித்த கார் எதிர்ப்புறப் பாதைக்கு செல்ல முயற்சித்த போது, எதிரே வந்த பாதசாரிகள் மீது மோதியதுடன் சாலையோரத்தின் இரண்டு எல்லைத் தூண்களை மோதிச் சேதப்படுத்திய பின்னர் சாலையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சாரதியின் தூக்க கலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இந்நிலையில், கைது செய்யப்பட்ட சாரதி களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.