இந்தியாவின் டில்லியில் மாணவர்கள் தங்கியிருந்த பழைமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு டில்லியின் சத்யா நிகேதன் பகுதியில், நானக்புரா குருத்வாரா அருகே இயங்கி வந்த மாணவர் விடுதி இன்று (06) மதியம் சுமார் 1.30 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது.
சம்பவத்தையடுத்து பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
இதுவரை மூவர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், பலத்த காயமடைந்த அவர்கள் சிகிச்சைக்காக எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இடிபாடுகளுக்குள் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. வார இறுதி நாள் என்பதால் சில மாணவர்கள் விடுதியில் இல்லாததால், உயிரிழப்புகள் குறைந்திருக்கலாம் என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.


Post a Comment
Post a Comment