மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது வெற்றிடமாக உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பதவிக்காக குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.


Post a Comment
Post a Comment