🔵 ஓட்டமாவவடி பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்



 


✍️ எஸ்.எம்.எம்.முர்ஷித்


ஓட்டமாவவடி பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று 04.09.2026) வெள்ளிக்கிழமை மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.


பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் இடம் பெற்றது. 


எல்லினோ தாக்கம் தொடர்பாகவும் நீரை சிக்கனமாக பாவிப்பதற்கு பொதுமக்களை தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், அசுவெசும, சமுர்த்தி அபிவிருத்தி, அத்தம வேலைத்திட்டம், கல்வி, போக்குவரத்து, சுகாதாரம், குடி நீர், விவசாயம், வீதி அபிவிருத்தி, மீன் பிடி போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதுடன் அதற்கான விடயங்களும் ஆராயப்பட்டதுடன் சில விடயங்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டதுடன் தீர்க்கப்படாத விடயங்கள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு அவ்விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.


இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஹலால்தீன், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலய கல்வி பணிப்பாளர் ஏ.ஜவாத், வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜறூல், பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எச்.எம்.எம்.பாறூக், ஓட்டமாவடிபிரதேச சபை உதவி தவிசாளர் நுபைல், கிளீன்ஸ்ரீலங்கா தவிசாளர் சி.எம். புர்க்கான் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜாசக்தி தவிசாளர்கள், திணைக்களத்தலைவர்கள், சமுகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.