மொரட்டுவை, சொய்சாபுர பகுதியில், எதிர்பாராத விதமாக பெரும் தீ விபத்து



மொரட்டுவை, சொய்சாபுர பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் 'C' பகுதியில் இன்று (23) இரவு எதிர்பாராத விதமாக பெரும் தீ விபத்து சம்பவித்துள்ளது.


இந்த விபத்தில் குடியிருப்பில் இருந்த மூவர் தீக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


உயிரிழந்தவர் ஒரு ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


தகவலறிந்து உடனடியாகச் செயற்பட்ட மொரட்டுவை தீயணைப்புப் படையினர், 2 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


சமையல் எரிவாயுக் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.