களனி பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் தீ விபத்து



 


களனி பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 


தீயைக் கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


களனி பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இன்று (நவம்பர் 3, 2026) முற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


தீ விபத்து ஏற்பட்டபோது அந்த அறைக்குள் மாணவிகள் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அறையில் இருந்த மாணவிகளின் அனைத்துப் பொருட்களும் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளன.


தீ விபானத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை; இது குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.