தென்னிலங்கை அதிவேகப் பாதையின் கெலனிகம பரிமாற்றகத்திற்கு (Interchange) அருகே 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தினைத் தொடர்ந்து, கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகனப் போக்குவரத்து ஒரு பாதையாக மட்டுமே தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment