அரச நிறுவனங்கள் அமைந்துள்ள காணிகளின் சொந்தக்காரர்களுக்கு நஷ்டஈடு வழங்குதல் தொடர்பான விசேட கூட்டம்!
கே.எ.ஹமிட்
இறக்காமம் பிரதேச செயலகம், இறக்காமம் வைத்தியசாலை, இறக்காமம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆகிய அரச நிறுவனங்கள் தனியார்களுக்குச் சொந்தமான காணிகளில் அமைந்துள்ளது. இதனால் காணிகளை இழந்த காணி உரிமையாளர்கள் சங்கம் தங்கள் காணிகளுக்கான நஷ்டஈடுகளை வழங்குதல் அல்லது மாற்றுக் காணிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
இது தொடர்பான விசேட கூட்டம் இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் எம்.என்.முஸ்மி தலைமையில் இறக்காமம் பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம்.முஷர்ரப் முதுநபின், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.ஆஷிக், முன்னாள் தவிசாளர் எம்.ஐ.நைசர், கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஏ.ரியாஸ், இறக்காமம் பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எஸ்.எம்.நிஸார், காணிகளை இழந்த உரிமையாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் காணி இழந்தவர்களுக்கான நஷ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகளை பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் இறக்காமத்தில் காணி இழந்தவர்களுக்கான பணிகளை ஒழுங்குபடுத்துவதற்கான விசேட குழுவொன்றும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதற்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.எல்.முஸ்மி, ஆசிரியர்களான ஏ.றியாஸ், எஸ்.எம்.நிஸார், பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.ஆஷிக், முன்னாள் தவிசாளர் எம்.ஐ.நைசர், கே.எல்.சமீர், பி.ரி.சுபைர், ஏ.எல்.மன்சூர், எம்.அன்வர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment
Post a Comment