குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் அருட்தந்தை சிறில் காமினி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த இரண்டு மனுக்களும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான ஷாந்த ஜயதிலகவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் முன்னதாக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த சத்தியப்பிரமாணப் பத்திரத்தின் மூலம் நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றதாக ஒரு மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதேவேளை, மற்றைய மனுவில், அருட்தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) சமர்ப்பித்திருந்த முறைப்பாட்டின் உள்ளடக்கத்தின் மூலம் நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இரு மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Post a Comment
Post a Comment