(கனகராஜா சரவணன்)
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கு. சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டதாகக் கூறி பாராளுமன்ற உறுப்பினர் இரா. அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ் உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு, இன்று (22) நீதிவான் அண்ணத்துரை தர்ஷினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்காளி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
வழக்கில் நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளை ஒன்றை பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
.webp)

Post a Comment
Post a Comment