எஸ். ஜே. புஹாது
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பிரதான வீதியில் இன்று (22) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், நிந்தவூரைச் சேர்ந்த 26 வயதுடைய பாத்திமா என்ற இளம் பெண் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சைக்கிளின் பின் சக்கரத்தில் அவரது ஆடை சிக்குண்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் ஜனாஸா தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஆழ்ந்த அனுதாபங்கள். 🖤🕊️


Post a Comment
Post a Comment