பாடசாலை புத்தகங்களுக்கு விதிக்கப்படும் வற் வரியை நீக்க நடவடிக்கை – ஜனாதிபதி



 


பாடசாலை புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை(VAT) நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


நொச்சியாகம பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.


இந்த வரியை நீக்குவதற்கான தேவையான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்வரும் வரவு–செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.