நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழம் குறைந்த கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படக்கூடும் என்பதால், கடற்படையினர் மற்றும் மீனவர்கள் அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு முதல் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு ஊடாக முல்லைத்தீவு வரையிலான ஆழமான மற்றும் ஆழம் குறைந்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இதனால் அப்பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பகுதிகளிலும் அவ்வப்போது கடல் கொந்தளிப்புடன் காணப்படக்கூடும்.
புத்தளம் முதல் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கரையோரக் கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் 2 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.
எனவே, கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறும், இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை அறிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Post a Comment
Post a Comment