அமெரிக்காவின் புளோரிடாவில் பயங்கர விமான விபத்து – பாரிய பள்ளம்; 9 பேர் உயிரிழப்பு




அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், பாம் பீச் கவுண்டியில் தனியார் Learjet 60 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பான புதிய காணொளிகள் வெளியாகியுள்ளன.


விமானம் வீழ்ந்ததில் வீதியில் பாரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், அருகிலுள்ள வீடுகளுக்கு மிக அண்மையில் விமானத்தின் சிதைவுகள் சிதறிக் கிடக்கின்றன.


ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தைத் தொடர்ந்து விமானம் தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியுள்ளது.


அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் சீன் டஃபி, விமானத்தில் பயணித்த 9 பேரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.


டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டினிலிருந்து புறப்பட்ட விமானம், பஹாமாஸின் நார்த் எலியூதெரா நோக்கிப் பயணித்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தரையில் இருந்த பொதுமக்கள் உயிரிழந்ததாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.


இவ்விபத்து தொடர்பில் அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை (NTSB) ஆகியன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.


விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.


#NFMEDIA