நமக்கு பாடம் சொல்லித்தருபவர் மட்டும் ஆசான் அல்ல! தன் வாழ்வையே பாடமாக கூறுபவரும் ஆசான் தான்!” என்ற இந்த வரிகளே பல கதைகள் சொல்லும். நாம் இதுநாள் வரை பள்ளிக்கு சென்று அங்கு பாடம் கற்பிப்பவரே ஆசன் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறொம். ஆனால், ஆசன் என்பவர் அப்படி அல்ல. ஒருவனுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத்தந்து, அவனுக்குப் பிடித்த பிரிவில் அவன் திறமைகளை வளர்க்க உதவி, அவனை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்பவரே ஆசிரியர் தான். மேலும் ஒருவன் தீய வழியில் சென்று கொண்டிருந்தால் அவனுக்கு அறிவுரைகள் வழங்கி நல்வழிப்படுத்துபவர் ஆசிரியர்.
உலக ஆசிரியர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 5 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
- கொண்டாடும் நாள்: அக்டோபர் 5 (உலகளவில்).
- இலங்கையில் ஆசிரியர் தினம்: அக்டோபர் 6 (இன்று).
- இந்தியாவில் ஆசிரியர் தினம்: செப்டம்பர் 5 (டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்).
- தோற்றம்: 1966 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) மற்றும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) ஆசிரியர் நிலைப் பரிந்துரைக் கையெழுத்து நினைவாக 1994 முதல் இது கடைபிடிக்கப்படுகிறது.


Post a Comment
Post a Comment