வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழமுக்கப் பிரதேசம்




 வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை குறித்த கடற்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வரையிலான கடற்பகுதி மற்றும் பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளிலும் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மறு அறிவித்தல் வெளியாகும் வரை இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.