Showing posts with label Central. Show all posts

 நாட்டை தாக்கிய டிட்வா சூறாவளியினால் காணாமல் போன 173 பேரை, இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


2025 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி, இலங்கையின் தென் கடற்பரப்பில் உருவான குறைந்த அழுத்தம் நவம்பர் 27 ஆம் திகதி சூறாவளியாக மாறியது.


அந்தச் சூறாவளிக்கு டிட்வா எனப் பெயரிடப்பட்டது.


இந்த சூறாவளியினால் நாட்டின் 22 மாவட்டங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டன.


சுமார் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


இதுவே, இலங்கை வரலாற்றில் இயற்கை அனர்தத்தினால் ஏற்பட்ட அதிகூடிய உயிரிழப்பாக பதிவாகியுள்ளது.


டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 150 குடும்பங்கள் இன்றும் 41 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளன.


வீடுகளை இழந்த மேலும் 43 ஆயிரத்து 831 குடும்பங்கள், வேறு இடங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.



தொழிலாளர்களின் துன்ப துயரங்களைப் பார்க்க தேயிலைத் தோட்டத்திற்குச் சென்ற ஜனாதிபதி அநுர

#VoiceTube #voicetubetamil #voicetubetamilsrilanka #SriLankaPolitics #TamilNews #ANURAKUMARADISSANAYAKE

 

மஸ்கெலியா நிருபர்-

பொலிஸ் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட மரநடுகை வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஹட்டன் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


சுற்றாடலைப் பாதுகாப்பதும், அரச நிறுவன வளாகங்களைப் பசுமையாக்குவதும் இதன் பிரதான நோக்கமாகுமென ஹட்டன் பொலிஸ் சுற்றாடல் பிரிவின் அதிகாரி சுந்தர அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஏற்பாட்டில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஹட்டன் மாவட்ட நீதிபதி திரு. ஏ. பீற்றர் போல் கலந்துகொண்டார். அவர் அடையாள ரீதியாக மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், அதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பெறுமதிமிக்க பல மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்வில் ஹட்டன் நீதிமன்ற பதிவாளர் இசுரு சேனானந்த, ஹட்டன் பொலிஸ் சுற்றாடல் பிரிவின் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 நிபுணர்களிடம் இருந்து முறையான அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டு, அபாய நிலை குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை அம்புலுவாவ மலையில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவித்துள்ளது. 


அம்புலுவாவ சுற்றாடல் வலயத்தின் முகாமைத்துவத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விசாரணை செய்வதற்காக சுற்றாடல் அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசேட நிபுணர் குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், சுற்றாடல் அமைச்சின் ஆலோசனைக்கமைய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து அம்புலுவாவ சுற்றாடல் வலயத்தை அவதானிப்பதற்காக எதிர்வரும் நாட்களில் கள விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ, சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய மிக அழகான இடமாகும். இது கம்பளை நகருக்கு வருபவர்கள் அனைவருக்கும் மிகத் தெளிவாகவும் அழகாகவும் காட்சியளிக்கும் ஒரு மலை உச்சியாகும். 

அங்கு தற்போது அமைக்கப்பட்டுள்ள அம்புலுவாவ பல்லுயிர் பெருக்க வளாகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்த இடமாகும். 

கம்பளை - ஹெம்மாத்தகம வீதியில் பயணிக்கும் போது சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அம்புலுவாவவுக்கான பிரதான நுழைவாயில் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மலை உச்சிக்குச் செல்வதன் மூலம் அம்புலுவாவ விகாரையை அடையலாம். 

அம்புலுவாவ 927 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுடன், அதிகளவிலான தாவரங்கள் மற்றும் விலங்குகள் வாழும் உயர் பல்லுயிர் தன்மையைக் கொண்ட ஒரு அழகிய சூழல் தொகுதியாகும். மலை உச்சியில் நெற்களஞ்சியத்தின் வடிவில் அம்புலுவாவ சைத்தியம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 400 அடி உயரத்தைக் கொண்டது. 

இந்தச் சைத்தியத்தின் உச்சிக்கு ஏறுவது மிகவும் சிலிர்ப்பான ஒரு அனுபவமாகும். இதற்காகவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

 


(வி.ரி. சகாதேவராஜா)


பேரிடரால்  பாதிக்கப்பட்டு அறநாயக்க ஹத்கம்பொல றஜமகா விகாரையில் தங்கியுள்ள பெரும்பான்மையின மக்களுக்கு 
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஜ.எல்.எம் மாஹிர்  தலைமையிலான குழுவினர் பேரிடர் நிவாரண உதவிகளை வழங்கி வைத்தனர்.

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் மாஹிருடன் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்புடன் கற்றலுக்கான காசோலை மற்றும் நீர் இயத்திரம் கையளிக்கும் நிகழ்வு அங்கு இடம் பெற்றது. 

இது அறனாயக்கா பௌத்த தேவாலயத்தில் உள்ள முகாமில் தங்கியிருக்கும்  பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

 



இந்த நாட்களில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.


நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை சாதாரண மட்டத்தில் பராமரிக்க குறித்த வான் கதவு திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.


அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள நுவரெலியா சினிசிட்டா  மண்டபத்தில் அமைந்துள்ள பராமரிப்பு நிலையத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக இன்று (08) பிற்பகல் சென்று, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி  அவர்களின் தேவைகள் மற்றும்  தகவல்களை கேட்டறிந்து கொண்டார்.

 மலையக நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 8 உடல்களை மீட்க #UAE பேரிடர் நிவாரணக் குழு இன்று உதவியது.


@UAEEmbColombo ஆதரவுக்கு நன்றி 
#cycloneditwa | #Srilanka


 🔴 கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டு தற்போதுள்ள நிலையிலிருந்து விரைவாக மீண்டுவருவது குறித்து ஆலோசனை நடாத்தினார், இதன்போது இந்த ஒரு மாதகாலத்தில் சாதாரண அரச நடவடிக்கைகளில் இருந்து விலகி அனைத்து அரச இயந்திரங்களுடனும் இணைந்து துரிதமாக செயற்படுமாறும் அழைப்பு விடுத்தார்.


#AKD #srilanka #vaanamlk #SriLankaFloods

ண்டி - கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததன் காரணமாக, அவ்வீதி ஊடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


குறிப்பாக, கனேதென்ன பிரதேசத்தில் விற்பனை நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 

இந்த அனர்த்தத்தில், அந்த விற்பனை நிலையத்தில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

 

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

மேலும் சில நபர்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இவர்களை மீட்கும் நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தற்போது ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

 

இந்நிலையில், வீதியின் வாகன போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தற்போது நிலவும் ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு, இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இயன்றவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Comments
0

MOST READ
title

    இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

    Powered by Blogger.