நாட்டை தாக்கிய டிட்வா சூறாவளியினால் காணாமல் போன 173 பேரை, இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி, இலங்கையின் தென் கடற்பரப்பில் உருவான குறைந்த அழுத்தம் நவம்பர் 27 ஆம் திகதி சூறாவளியாக மாறியது.
அந்தச் சூறாவளிக்கு டிட்வா எனப் பெயரிடப்பட்டது.
இந்த சூறாவளியினால் நாட்டின் 22 மாவட்டங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டன.
சுமார் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதுவே, இலங்கை வரலாற்றில் இயற்கை அனர்தத்தினால் ஏற்பட்ட அதிகூடிய உயிரிழப்பாக பதிவாகியுள்ளது.
டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 150 குடும்பங்கள் இன்றும் 41 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளன.
வீடுகளை இழந்த மேலும் 43 ஆயிரத்து 831 குடும்பங்கள், வேறு இடங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment