மணல் ஏற்றிய இருவருக்கு அபராதம்



அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் பள்ளக்காடு பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் டிப்பர் வாகனத்திலும் உழவு இயந்திரத்திலும் ஆற்று மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்ட இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


 டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றியவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றியவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் விதித்துள்ளார்.