ஜனாதிபதி ஆணைக்குழுவின் 14வது அமர்வு விசாரணைகள்




ஜனாதிபதி ஆணைக்குழுவின் 14வது அமர்வு விசாரணைகள் ஆரம்பம்காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 14வது அமர்வு விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 


யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறும் இந்த அமர்வில், நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணாமல் போனோரின் உறவினர்கள் தமது சாட்சியங்களை பதிவு செய்து வருகின்றார்கள். 

நல்லூர் பிரதேச செயலகத்தில் 235 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

யாழப்பாணம் பிரதேசம் மற்றும் பருத்தித்துறை, தெல்லிப்பளை, சண்டிலிப்பாய் உள்ளிட்ட பிரதேச செயலகங்களில் இந்த விசாரணைகள்இடம்பெறவுள்ளன
(ADA DERANA)
.