15ம் திகதி வேலை நிறுத்தம்



எதிர்வரும் 15ம் திகதி அரச, அரை அரசாங்க (semi-government) மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. 



2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தொழிற்சங்கத் தலைவர்கள் இதனைக் கூறியுள்ளனர். 

அத்துடன் இந்தக் கலந்துரையாடலில் நியாயமான தீர்வு கிடைக்கப் பெறவில்லை என, ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் இணைப்பாளர் சமன் ரத்னப் பிரிய குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி எதிர்வரும் 15ம் திகதி காலை 07.00 மணி முதல் சுகாதார துறையினரும், 14ம் திகதி நள்ளிரவு முதல் ரயில்வே சார்ந்த துறையினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்திலுள்ள குறைபாடுகளை நீக்க இன்னும் இரு நாட்கள் அவகாசம் உள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.