சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜிஷானின் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது (பிந்திக் கிடைத்த தகவலின் படி 31) பேராவது கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேற்றுப் பிரிவுகள் இருக்கும் மருத்துவமனையின் முதலாவது மாடியிலேயே வியாழக்கிழமை அதிகாலையில் முதலில் தீ பற்றியுள்ளது.
தீப்பற்றியதற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை. புலன் விசாரணகள் நடக்கின்றன.
அவசர சேவைப் பிரிவினர் இப்போது தீயை அணைத்துவிட்டனர்.