ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க்கின் மனைவி பிரிஸில்லா சானிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
அக்குழந்தைக்கு மெக்ஸ் என பெயர் சூட்டியுள்ளனர்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் நிறுவனர் மார்க் சக்கர்பர்க்கும் அவரது மனைவியும் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக, தத்தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
மேலும், அக்குழந்தையின் புகைப்படத்தையும் அவர்கள் தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், இருவரும் இணைந்து தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் தங்களது வாழ்நாளில் 3 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 99 சதவீதம் தங்களுடைய கம்பெனிகளின் பங்குகளை உலக மக்களின் மகிழ்ச்சிக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
