ஜனாதிபதி செயலகத்திலிருந்து மரண வீடுகளுக்கு அனுப்பப்படும் மலர் வளையங்களில் கூட ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்காக முன்னாள் ஜனாதிபதியை நான் குற்றஞ்சாட்ட மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பை வடிவமைக்கவும் அதை நிறைவேற்றவும், நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்லவும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிரணியை வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற, வரவு - செலவுத்திட்டத்தில் ஜனாதிபதிக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
