ஜாவா கடலில் கடந்த ஆண்டு ஏர் ஏஷியா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதற்கு காரணம், விமானத்திலிருந்த கோளாறான பாகமும், விமானிகளின் தவறுகளும் தான் காரணம் என்று இந்தோனேஷியாவிலுள்ள விமான விபத்து விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் பயணித்த மொத்தம் 162 பேரும் கொல்லப்பட்டனர்.
அந்த விமானம் ஏர்பஸ் ஏ320 விமானத்தின் கட்டுப்பாட்டுக் கணினியில் இருந்த ஒரு சுட்டிணைக்கப்பட்ட பகுதி பிளவுப்பட்டிருந்ததாக, ஜகார்தாவில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட தேசிய போக்குவரத்துக்கான பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவின் சுராபயாவிலிருந்து சிங்கப்பூர் சென்றுகொண்டிருந்தபோது அந்த விமானத்தில் நான்கு முறை கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
விமானக் குழுவின் நடவடிக்கைகள், அந்த விமானத்தை மீட்கமுடியாத நிலைக்கு கொண்டு சென்றுவிட்டதாக அந்த அறிக்கை கூறுகின்றது.
