2015 ஆம் ஆண்டிற்கான மகாவலி பிரதீபா கலாசார நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.
இதன் போது தமது திறமையை வௌிப்படுத்திய சிறுவர்களுக்கு ஜனாதிபதி பரிசில்கள் வழங்கினார்.
மகாவலி திட்ட கிராம விவசாயிகளின் பிள்ளைகளின் திறமைகள் குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், தற்போது வழங்கப்படும் மகாவலி புலமைப்பரிசில் திட்டத்தை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

