முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இரகசிய சந்திப்பு எதனையும் நடத்தவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் பாராளுமன்றில் மஹிந்தவை சந்தித்த போது பக்கத்து அறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியை தாம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். எவ்வித இரகசிய பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் மரணம் பற்றிய சட்ட வைத்திய அறிக்கை வெளியானதன் பின்னர், பிரதமரை மஹிந்த சந்தித்தமை பரவலாக பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
