தற்போது கிடைத்த உத்தியோகபற்றற்ற தகவலின் படி மூதூர் கடற் பரப்பில் 05 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும். இவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடலங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை நேற்று மன்னார் கடற்கரையிலும், இன்று திருகோணமலையின் நிலாவெளி கடற்கரையிலும் தலா ஒரு ஒரு சடலங்கள் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
மேலதிக தகவலுக்காக மூதூர் செய்தியாளருடன் தொடர்பில் உள்ளோம்.
திருகோணமலை கடற்பரப்பில் சில சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய, தமது படகுகள் இரண்டை கடலுக்குள் அனுப்பியுள்ளதாக இலங்கை கடற்பைடை தெரிவித்துள்து. திருகோணமலை சாம்பூரை அண்மித்த கடற்பரப்பிலேயே இந்த சடலங்கள் மிதப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை திருகோணமலை – நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று கரையொதுங்கி இருந்தது.
குறித்த சடலத்திலிருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, அவர் சென்னையில் உள்ள நபர் என தெரிய வருகின்றது. இரண்டாம் இணைப்பு திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மனித சடலங்கள் மிதப்பதாக வெளியான தகவல்களை அடுத்து இலங்கை கடற்படையினர் தேடுதல்
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலையில் உள்ள பொலிஸ் தரப்பு தகவலின்படி குறைந்தது 6 சடலங்கள் திருகோணமலை கடலில்
மிதப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலையில் உள்ள பொலிஸ் தரப்பு தகவலின்படி குறைந்தது 6 சடலங்கள் திருகோணமலை கடலில்
மிதப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து விடயம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு இரண்டு கடற்படை படகுகள் தேடுதலுக்கு பயன்படுத்தப்பட்டன. எனினும் இன்று இரவு 9.30 வரை தம்மால் எந்தவொரு சடலத்தையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் இந்த சடலங்கள் தமிழகத்தின் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களினதாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
