ருவாண்டாவில் 2017ஆம் ஆண்டில் நடக்கக்கூடிய அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் பால் ககாமெ மூன்றாவது ஆட்சிக்காலத்துக்காக போட்டியிடுவதை அனுமதிக்கும் அரசியல் சட்ட சீர்திருத்தம் பற்றிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்று அடுத்த வாரம் நடக்கும் என்று அந்நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது.
முப்பது லட்சம் பேர் சேர்ந்து மனுகொடுக்க அந்த அரசியல் சீர்திருத்தம் முன்னெடுக்கப்படுவதறு நாடாளுமன்றம் போனமாதம் ஒப்புதல் அளித்திருந்தது.
1994ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்ததற்குப் பின்னர் ருவாண்டாவை மீளக் கட்டியெழுப்புவதில் பெரும்பங்காற்றியவராக ககாமெ பார்க்கப்படுகிறார்.
ஆனால் மாற்றுக் கருத்தை ஒடுகும் போக்கு அவரிடம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியினர் சாடுகின்றனர்.
