விசேட ரயில் சேவைகள் இன்றும் முன்னெடுப்பு




பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை 8.45 பண்டாரவளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையில் விசேட ரயிலொன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக மருதானை ரயில் நிலையத்திலிருந்து காலி வரையில் கடுகதி ரயிலொன்றும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் காலியிலிருந்து ரம்புக்கனை வரையிலும் இன்று காலை 10.30 மணிக்கு கடுகதி ரயிலொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.