வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதங்களின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய நேரம் ஒதுக்கப்படாது அநீதி இழைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் இன்றைய விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் இணைப்புப் பணிகளில் ஈடுபடும் பொறுப்பு ஜனாதிபதியினால், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரட்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தினேஸ் குணவர்தன, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
