பொலிஸாரால் சாலை ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு முன்வைக்க இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெழுணு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
வீதி ஒழுங்குகளின் போது உயர் வகுப்பினருக்கு எதிராக சட்டத்தை பொலிஸார் உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதில்லை என, குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது எனவும், இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படும் எனவும் கெமுணு விஜேரத்ன மேலும் கூறியுள்ளார்.
